பாலக்கோடு வட்டம் பி. கொல்லஅள்ளி மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினர்கள் 107 பேருக்கு ரூ. 2.37 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகைகளை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
அப்போது, அவர் பேசியது:
பி. கொல்லஅள்ளி சங்கத்தில் நாள் ஒன்றுக்கு 1,450 லிட்டர் வீதம் ஆண்டுக்கு 5.14 லட்சம் லிட்டர் பால் வழங்கப்படுகிறது. இதில் கிடைக்கும் லாபத்தில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் பெண்களுக்கு ஆடு, மாடுகள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு வழங்கும் பணியும் தற்போது நடைபெறுகிறது. பணிக்குச் செல்லும் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் 2097 பெண்கள் பயனடைந்துள்ளனர் என்றார் அன்பழகன்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் எச். ரஹமத்துல்லாகான், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் டி.ஆர். அன்பழகன், ஆவின் பொது மேலாளர் பசுவராஜ், வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
"அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்கள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்'
அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 3 எம்எல்ஏக்களும் கொறடாவிடம் உரிய விளக்கமளிக்க வேண்டும் என மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில்தான் தமிமூன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகிய மூவரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். எனவே, இவர்களிடம் கொறடா விளக்கம் கேட்டுள்ளது சரியானதுதான்.
அவர்கள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதன் உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டபோதும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே இந்த இரு தொகுதிகள் உள்பட 20 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பாதிப்புகள் எதுவும் இல்லை என்றார் அன்பழகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகர் சூரி நடிக்கும் மண்டாடி அப்டேட்!

சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினை வெளியீடு!

தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிய சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட நிகழ்ச்சி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
விடியோக்கள்

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking


