ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

"வாழ்க்கை சிறியது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்'

வாழ்க்கை சிறியது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்; அவ்வாறு புரிந்து கொண்டால் இருக்கும் குறுகிய

Updated On :8 அக்டோபர் 2018, 8:35 am IST

வாழ்க்கை சிறியது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்; அவ்வாறு புரிந்து கொண்டால் இருக்கும் குறுகிய காலத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்  என்றார் தருமபுரி அரசுக் கலைக் கல்லூரியின் பேராசிரியர் கு. சிவப்பிரகாசம்.
தருமபுரி மாவட்ட அறிவியல் இயக்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 22ஆவது இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எழுத்தாளர் எஸ். அர்ஷியாவின் "மரணத்தில் மிதக்கும் சொற்கள்' என்ற சிறுகதை நூல் குறித்து அவர் மேலும் பேசியது:
மரணம் தவிர்க்கவே முடியாதது. என்றாவது ஒருநாள் நாம் இறந்தே ஆக வேண்டும். ஆனால், அந்த மரணம் நெருங்கும் தருணம் அறியும்போது பலரும், இன்னும் சில காலம் வாழ்ந்தால் அதைச் செய்துவிடலாமே, இதைச் செய்துவிடலாமே என ஏக்கமுற்றிருப்பர்.
எனவே, மரணம்தான் வாழ்க்கையைப் புரிய வைக்கிறது. அர்த்தமுள்ளதாக்குகிறது. எவ்வித வேறுபாடுகளின்றியும் வாழ நமக்குக் கற்றுத் தருகிறது. வாழ்க்கை சிறியது என்பதைப் புரிந்து கொண்டால் அந்தக் குறுகிய காலத்துக்குள் ஏதாவது செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
"மரணத்தில் மிதக்கும் சொற்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பில் 9 சிறுகதைகள் உள்ளன. இதில் 6 சிறுகதைகள்  இஸ்லாமியர்களின் வாழ்க்கை சார்ந்தது. கற்பனை கலந்த அர்ஷியாவின் மொழிநடை தொடர்ந்து வாசிக்கத் தூண்டுகிறது என்றார் சிவப்பிரகாசம்.
கூட்டத்துக்கு ஆசிரியர் கலாவதி தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் சுஷீல்குமார் ஒருங்கிணைத்தார். நடைபழகு குழுவின் சிறார்கள் நன்றி கூறினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.