தருமபுரி பி.எஸ்.என்.எல். சார்பில் இலவச தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படுவதாக அதன் மாவட்ட முதன்மை பொதுமேலாளர் கே.வெங்கடராமன் தெரிவித்தார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனம் இணைந்து இலவச தொழில்நுட்பப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 10-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை கல்வி தகுதி உள்ளவர்கள் இப் பயிற்சியில் சேரலாம். இப்பயிற்சி பெற விரும்புவோர் http://rgmttc.bsnl.co.in/jobporta என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும், பயிற்சி பெறுவோருக்கு நாளொன்றுக்கு ரூ.100 போக்குவரத்துப்படி வழங்கப்படும். பயிற்சி பெற இணயத்தில் பதிவு செய்தவர்கள் தங்களது ஆவணங்களுடன் வருகிற செப்.5-ஆம் தேதி தருமபுரி பாரதிபுரத்தில் உள்ள தொலைத்தொடர்பு பொதுமேலாளர் அலுவலகத்துக்கு நேரில் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னல் பாய்ந்ததில் 2 விவசாயிகள் உயிரிழப்பு

காணாமல்போன 194 பேரை மீட்டு குடும்பத்தினருடன் சோ்த்துவைப்பு தில்லி காவல்துறை நடவடிக்கை

தெலங்கானாவில் மருந்து ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி, 8 பேர் காயம்

ராயல் என்ஃபீல்டு விற்பனை 31 சதவீதம் அதிகரிப்பு!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

