
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஏழாம் வகுப்பு தேறியவர்கள் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் (பொ) பிரபாகர் அழைப்பு விடுத்துள்ளார்.
எழுத்துத் தேர்வு வரும் டிச. 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. 2006 ஜூலை 2-ஆம் தேதி முதல் 2008 ஜனவரி 1-ஆம் தேதிக்குள் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதில், ஆங்கிலம், கணிதம், பொது அறிவு ஆகிய மூன்று தேர்வுகள் நடத்தப்படும். அனைத்துப் பாடங்களிலும் 50 சதவீத மதிப்பெண் எடுப்பவர்கள் மட்டும் வரும் 2019 ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.600, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.550. The Commandant, RIMC, Dehradun என்ற பெயரில் வரைவோலை எடுத்து, உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள டெகராடூன், ராஷ்ட்ரிய இந்திய ராணுவப் பயிற்சிக் கல்லூரியின் கட்டளைதாரருக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்- செப். 30.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





