6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் சேர அழைப்பு

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஏழாம் வகுப்பு தேறியவர்கள் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பயன்பெறலாம் என 

Published On :

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஏழாம் வகுப்பு தேறியவர்கள் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் (பொ) பிரபாகர் அழைப்பு விடுத்துள்ளார்.
எழுத்துத் தேர்வு வரும் டிச. 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. 2006 ஜூலை 2-ஆம் தேதி முதல் 2008 ஜனவரி 1-ஆம் தேதிக்குள் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதில், ஆங்கிலம், கணிதம், பொது அறிவு ஆகிய மூன்று தேர்வுகள் நடத்தப்படும். அனைத்துப் பாடங்களிலும் 50 சதவீத மதிப்பெண் எடுப்பவர்கள் மட்டும் வரும் 2019 ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.600, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.550. T‌h‌e C‌o‌m‌m​a‌n‌d​a‌n‌t, RI​MC, D‌e‌h‌r​a‌d‌u‌n என்ற பெயரில் வரைவோலை எடுத்து, உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள டெகராடூன், ராஷ்ட்ரிய இந்திய ராணுவப் பயிற்சிக் கல்லூரியின் கட்டளைதாரருக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்- செப். 30.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.