அரூரில் அக். 7-ல் ஆர்.முத்துக்கவுண்டர் நூற்றாண்டு விழா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரூர் ஆர். முத்துக்கவுண்டரின் நூற்றாண்டு விழா வரும் 7-ஆம் தேதி நடைபெறுகிறது.


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரூர் ஆர். முத்துக்கவுண்டரின் நூற்றாண்டு விழா வரும் 7-ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அரூர்-சேலம் பிரதான சாலையில் உள்ள என்.என்.மஹால் வளாகத்தில் காலை 9.30 மணியளவில் விழா நடைபெறுகிறது.
விழாவில், தமிழ்நாடு காவிரி நீர்பாசன விளைபொருள் விவசாயிகளின் நல உரிமைப் பாதுகாப்புச் சங்க துணைத் தலைவர் வி.ராஜாராம் தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலர் செ.நல்லசாமி வரவேற்கிறார்.
இதில், முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.
முத்துக்கவுண்டரின் வாழ்க்கை வரலாறு நூலை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிடுகிறார். ஆர்.முத்துக்கவுண்டரின் உருவப் படத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி திறந்து வைக்கிறார். மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விழா அறிமுக உரை நிகழ்த்துகிறார்.
த்துக்கவுண்டரின் வாழ்க்கை வரலாறு குறித்த நூலின் முதல் பிரதிகளை கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் பெஸ்ட் எஸ். ராமசாமி, முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கே.கார்வேந்தன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் சொல்லேர் உழவன் செல்லமுத்து உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
நூலாசிரியர் முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் ஏற்புரை வழங்குகிறார். அரூர் அம்மன் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முத்து ராமசாமி நன்றி கூறுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com