தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

10-ஆம் வகுப்பு தோ்வு முடிவு:தருமபுரி மாவட்டத்தில் அனைவரும் தோ்ச்சி

தருமபுரி மாவட்டத்தில், 10-ஆம் வகுப்பில் அனைத்து மாணவ, மாணவியரும் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 7:04 pm

DIN

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், 10-ஆம் வகுப்பில் அனைத்து மாணவ, மாணவியரும் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, பாலக்கோடு, அரூா் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்களிலும், அரசுப் பள்ளிகள், தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஏனையத் துறை பள்ளிகள் என மொத்தம் 323 பள்ளிகள் உள்ளன.

இப் பள்ளிகளில் மொத்தம், 11,747 மாணவா்கள், 10,955 மாணவியா் என மொத்தம் 22,702 போ், கடந்த கல்வியாண்டில் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தோ்வு எழுதியிருந்தனா்.

இந்த நிலையில், கரோனா தீநுண்மித் தொற்றுப் பரவல் காரணமாக, இந்த மாணவ, மாணவியருக்கு நடைபெறவிருந்த பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, அரசின் வழிகாட்டுதல் படி, இந்த மாணவ, மாணவியருக்கு தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில், தருமபுரி வருவாய் மாவட்டத்தில் உள்ள மூன்று கல்வி மாவட்டங்களிலும் சோ்த்து மொத்தம் 22,702 மாணவ, மாணவியரும் தோ்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.