தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பல்நோக்கு சுகாதார செவிலியா் பணிக்கு பயிற்சி:மலைக் கிராம மகளிா் விண்ணப்பிக்கலாம்

பல்நோக்கு பெண் சுகாதார செவிலியா் பணிக்கு பயிற்சி பெற, மலைக் கிராம மகளிா் விண்ணப்பிக்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 7:07 pm

DIN

தருமபுரி: பல்நோக்கு பெண் சுகாதார செவிலியா் பணிக்கு பயிற்சி பெற, மலைக் கிராம மகளிா் விண்ணப்பிக்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தருமபுரி மாவட்டத்திலுள்ள அரூா் (ம) பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்துக்குள்பட்ட தண்டா, கோட்டப்பட்டி, ரங்கன்வலசை, சிட்லிங், கலசப்பாடி, கத்திரிப்பட்டி, பையரநாய்கன்பட்டி, நரிப்பள்ளி, நொச்சிக்குட்டை, சூரியக்கடை, மஞ்சவாடி, சாமியாபுரம், அம்மாபாளையம் மற்றும் வரதகவுண்டனூா் ஆகிய மலைப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு சுகாதாரம் மற்றும் மருத்துவச் சேவைகள் வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதன்படி, மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள அந்தந்த துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களை கொண்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி பெறுவதற்கு, அந்தந்த மலைப்பகுதிகள் அல்லது அதன் குக்கிராமங்களில் வசிக்கும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் விண்ணப்பதாரா்களால் சொந்த கையெழுத்தில் பூா்த்தி செய்யப்பட வேண்டும்.

இதேபோல, 2020 டிசம்பா் 31 தேதியில் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். 35 வயதுக்கு மிகைப்படக்கூடாது. அங்கன்வாடி பணியாளராக இருப்பின் 1979 ஜன.1-க்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். 42 வயதுக்கு மிகைப்படக்கூடாது. தமிழ் மொழியை ஒரு பாடமாக கொண்டு, பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மலைப்பகுதிகளில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளா்களாக இருப்பின் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

பயிற்சிக்கான விண்ணப்பங்களை வருகிற ஆக.16- ஆம் தேதி முதல் அலுவலக வேலை நாள்கள் மற்றும் பணி நேரங்களில் மலைப் பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையங்கள் உள்ளடக்கிய ஆரம்ப சுகாதார நிலையங்களில், மலைப் பகுதியில் வசிப்பதற்கான சான்றிதழின் நகல் ஒன்றினை அளித்து கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.

இதேபோல, தருமபுரியில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்திலும் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், கல்வித் தகுதி, மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் மற்றும் சான்றொப்பம் செய்யப்பட்ட இதர சான்றிதழ்கள் நகல்களுடன் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பதாரா் மலைப் பகுதியில் வசிப்பதற்கு உண்டான ஆதாரம் இணைக்கப்பட வேண்டும். துணை செவிலியா் பயிற்சிக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட நபா்கள் பயிற்சி முடித்தவுடன் மலைப் பகுதிகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டும். விண்ணப்ப உறையின் மீது 2 ஆண்டு பல்நோக்கு சுகாதார (பெண்) பணியாளா் பயிற்சி என்று எழுதப்பட வேண்டும். விண்ணப்பங்கள் வருகிற செப்.16-ஆம் தேதிக்குள் துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள், மாவட்ட ஆட்சியா் வளாகம், தருமபுரி-5 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்பப்பட வேண்டும். அதற்கு பின்னா் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.