ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தானது நொடிக்கு 26 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.


கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தானது நொடிக்கு 26 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு, சாம்ராஜ் நகர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளிலும், கேரளத்தின் வயநாடு உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை பெய்து வந்ததால், கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி, காவிரி ஆற்றில் சுமார் நொடிக்கு 1.50 லட்சம் கன அடி வரையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பின் இரு மாநிலங்களிலும் பெய்து வரும் மழை அளவு குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் அளவுகளும் குறைக்கப்பட்டன. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது. தற்போது கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 29ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதன் கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 15 ஆயிரம் கன அடியாக இருந்த தண்ணீரின் அளவு வியாழன்கிழமை காலை நிலவரப்படி 18 ஆயிரம் கன அடியாகவும் ,மதிய நிலவரப்படி நொடிக்கு 26 ஆயிரம் கன அடியாக அதிகரித்து தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி , மெயின் அருவி , ஐந்தருவி மற்றும் சிற்றருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தினை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...