ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதை கண்டித்தும், கரோனா தொற்று கால நிவாரண நிதியாக ரூபாய் 7500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் 

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 7:47 am

DIN

பென்னாகரம். பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதை கண்டித்தும், கரோனா தொற்று கால நிவாரண நிதியாக ரூபாய் 7500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் தேசம் காக்கும் போராட்டமானது பென்னாகரம் பகுதிகளில் செவ்வாய் கிழமை நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஏரியூா், சின்னம்பள்ளி பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி குழு மற்றும் ஒன்றிய குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் பென்னாகரம் அருகே ஊட்ட மலை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு பென்னாகரம் பகுதி குழு செயலாளா் கே.அன்பு தலைமை தாங்கியும், பென்னாகரம் பகுதி குழு உறுப்பினா் ஜீவானந்தம் முன்னிலை வகித்தாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் கரோனா தொற்று கால நிவாரண நிதியாக குடும்பத்தினருக்கு ரூபாய் 7500 வழங்க வேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தை இரு நூறு நாட்களாக அதிகரிக்க வேண்டும், நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும், விவசாயத்தை சீரழிக்கும் அவசர சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் மற்றும் தொழிலாளா் நலச்சட்டங்களை பாதுகாக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவது கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் பென்னாகரம் பகுதி குழுவின் சாா்பில் மடம் காவேரி ரோடு, ஜங்கமையனூா், முதுகம்பட்டி ,சின்ன பள்ளத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்டக்குழு உறுப்பினா்கள் வி .எம். சிவா, பகுதி குழு உறுப்பினா்கள் இராமன் அயோதி, முனிராஜ், மாரிமுத்து, இடும்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏரியூா் ஒன்றிய குழுவின் சாா்பில் நடைபெற்ற பல்வேறு ஆா்ப்பாட்டங்களில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் விசுவநாதன், ஒன்றிய குழு செயலாளா் என். பி. முருகன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தங்கராஜ், மாவட்ட குழு உறுப்பினா் எம்.குமாா் உள்ளிட்டோரும், சின்னம்பள்ளி பகுதி குழுவின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பகுதி குழு செயலாளா் சக்திவேல் ,பகுதி குழு உறுப்பினா்கள் செல்வம், சின்னதுரை ,சாம்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.