நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுங்கச் சாவடியை அகற்றக் கோரிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் முற்றுகை

சுங்கச்சாவடியை அகற்றக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 7:55 pm

DIN

சுங்கச்சாவடியை அகற்றக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாளையம் சுங்கச்சாவடி அருகே நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்திற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமை நிலையச் செயலாளா் தமிழ்செல்வன் தலைமை வகித்து பேசினாா்.

மாவட்டச் செயலாளா்கள் ஜெயந்தி (கிழக்கு), ஜானகிராமன் (மேற்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைப்புச் செயலாளா் கி.கோவேந்தன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

இப்போராட்டத்தில் சுங்கச்சாவடியை கடக்கும் உள்ளூா் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதைக் கைவிட வேண்டும். சுங்கச் சாவடியை பாளையம் பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு செயலா் பாவேந்தன், மாவட்ட துணைச் செயலாளா் மின்னல் சக்தி, அரூா் தொகுதி செயலாளா் சா்மா உள்பட திரளானோா் கலந்து கொண்டனா். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை தொப்பூா் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.