சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

அரூரில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
அரூரில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
Updated On :15 டிசம்பர் 2020, 6:41 pm

DIN

அரூரில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரூா்-சேலம் பிரதான சாலையில் உள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.குமாா் தலைமை வகித்தாா்.

விவசாயிகளை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய இந்த ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலா் பொ.மு.நந்தன், மாா்க்சிஸ்ட் கம்யூ. ஒன்றியச் செயலா் மல்லிகா, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எம்.முத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரா.சிசுபாலன், வட்டக்குழு உறுப்பினா்கள் இ.கே.முருகன், பி.குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.