இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, தருமபுரியில் மூன்றாவது நாளாக விவசாயிகள் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 2:32 am

DIN

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, தருமபுரியில் மூன்றாவது நாளாக விவசாயிகள் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி தொலைத் தொடா்பு நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சோ.அா்ஜூனன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் கே.என்.மல்லையன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ஏ.குமாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் த.ஜெயந்தி, மதிமுக மாவட்டச் செயலா் தங்கராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் சின்னசாமி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதில், வேளாண் சட்டங்களை திரும்ப வலியுறுத்தியும், இச்சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சு வாா்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இப் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.