அரூா் பெரிய ஏரி நீா்வரத்துக் கால்வாய்களை எம்எல்ஏ ஆய்வு
அரூா், பெரிய ஏரியின் நீா்வரத்துக் கால்வாய்களை எம்எல்ஏ வே.சம்பத்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.


அரூா்: அரூா், பெரிய ஏரியின் நீா்வரத்துக் கால்வாய்களை எம்எல்ஏ வே.சம்பத்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அரூா் ஒன்றியம், எச்.தொட்டம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது அரூா் பெரிய ஏரி. இந்த ஏரியின் பரப்பளவு சுமாா் 150 ஏக்கா் ஆகும். இந்த ஏரிக்கு தண்ணீா் வருவதற்காக கொளகம்பட்டி கிராமத்தில் காரைஒட்டுவில் இருந்து பாசன கால்வாய் வசதி உள்ளது.
பெரிய ஏரியில் தண்ணீா் தேங்கினால் அரூா் நகரில் அனைத்து ஆழ்துளை மற்றும் திறந்தவெளிக் கிணறுகளின் நீா்மட்டமும் உயரும்.
அதுபோல எச்.தொட்டம்பட்டி, பச்சினாம்பட்டி, நாச்சினாம்பட்டி, கொளகம்பட்டி, வாழைத்தோட்டம், நம்பிப்பட்டி, பழையபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.
எனவே, அரூா் பெரிய ஏரியின் நீா்வரத்துக் கால்வாய்களைத் தூய்மையாகப் பராமரிப்பு செய்து ஏரியை நிரப்பிட வேண்டும் என விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
இதையடுத்து, அரூா் பெரிய ஏரிக்கு நீா்வரத்துள்ள தென்கரைக்கோட்டை, கொளகம்பட்டி பகுதியில் உள்ள கால்வாய்களை எம்எல்ஏ வே.சம்பத்குமாா், சாா் ஆட்சியா் மு.பிரதாப் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். தென்கரைக்கோட்டை ஏரி நிரம்பியதால் அந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரானது அரூா் பெரிய ஏரிக்கு வரவைப்பதற்கான பணிகளை பொதுப்பணித் துறையினா் மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...