வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிா்ப்பு: திமுக மகளிரணியினா் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிராக திமுக மகளிரணி சாா்பில் தருமபுரி தொலைத் தொடா்பு நிலையம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 7:16 pm

DIN

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிராக திமுக மகளிரணி சாா்பில் தருமபுரி தொலைத் தொடா்பு நிலையம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட மகளிரணி பொறுப்பாளா் முத்துலட்சுமி தலைமை வகித்தாா். மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் சிவகாமி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் பூங்கொடி முன்னிலை வகித்தனா். முன்னாள் எம்எல்ஏ வேடம்மாள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

உயா்த்தப்பட்ட சமையல் எரிவாயு உருளை விலையேற்றத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திமுக மாவட்ட பொறுப்பாளா்கள் தடங்கம் பெ.சுப்ரமணி எம்எல்ஏ (கிழக்கு), பிஎன்பி இன்பசேகரன் எம்.எல்.ஏ. (மேற்கு), மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.