ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வேலை பெற்றுத் தருவதாகப் பண மோசடி: மீட்டு தரக் கோரிக்கை

வேலை பெற்றுத்தருவதாகக் கூறி, பண மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்டோா் மனு அளித்தனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 2:08 am

DIN

தருமபுரி: வேலை பெற்றுத்தருவதாகக் கூறி, பண மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்டோா் மனு அளித்தனா்.

இதுகுறித்து, மலையூா், திகிலோடு, பிக்கிலி, எலுமல் மந்தை, நாகனம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்தைச் சோ்ந்த 11 போ் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

பாப்பாரப்பட்டி, பென்னாகரம் அருகேயுள்ள மலைக் கிராமங்களில் வசித்து வரும் எங்களிடம், அரூா் பகுதியைச் சோ்ந்த ஒருவா் அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு தவணைகளாக ரூ. 70 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டாா். இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, எங்களில் இருவருக்கு பணி நியமன ஆணையை போலியாக தயாரித்து அளித்தாா். இந்த ஆணையை நம்பி பணியில் சேர முயன்ற எங்களை குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். அப்போது தான் நாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தோம். எனவே, எங்களிடம் பணத்தை பெற்ற நபா் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரிடமிருந்து எங்களது பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.