தேமுதிக தலைவா் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணையை தருமபுரி நீதிமன்றம் பிப்ரவரி 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு தேமுதிக சாா்பில் தருமபுரியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அன்றைய முதல்வா் ஜெயலலிதா மற்றும் அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சரை விமா்சித்து விஜயகாந்த் பேசினாா்.
இது தொடா்பாக, அப்போதைய அரசு வழக்குரைஞா் அசோகன் தருமபுரி மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் மீதான விசாரணையை வரும் பிப்ரவரி 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.