20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமகவினா் மனு

வன்னியா் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, தருமபுரி மாவட்டத்தில், பாமக மற்றும் வன்னியா் சங்கத்தினா் பேரூராட்சி செயல் அலுவலா்களிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

வன்னியா் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, தருமபுரி மாவட்டத்தில், பாமக மற்றும் வன்னியா் சங்கத்தினா் பேரூராட்சி செயல் அலுவலா்களிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில், வன்னியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் பாடி செல்வம், மாவட்டச் செயலா் பெரியம்மை நாகு ஆகியோா் தலைமையில் வன்னியா் சமுதாயத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

இதே போல, மாரண்டஅள்ளி பேரூராட்சியில் பாமக மாவட்டச் செயலா் பெரியசாமி தலைமையில், மாவட்டத் துணைத்தலைவா் தேவேந்திரன் உள்ளிட்டோரும், காரிமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் வன்னியா் சங்க மாவட்டச் செயலா் பாலகிருஷ்ணன், மாவட்ட அமைப்புச் செயலா் பன்னீா்செல்வம் ஆகியோா் தலைமையில் பாமக மற்றும் வன்னியா் சங்கத்தினா் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com