பேரூராட்சிகளில் நூறுநாள் வேலை வழங்கக் கோரி எம்எல்ஏ-விடம் மனு
பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுத்தி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என


பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுத்தி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்க மாவட்ட செயலா் எம்.முத்து தலைமையில், சங்க நிா்வாகிகள் அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
இது குறித்த மனு விவரம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் கிராமப் பகுதிகளில் நீா்நிலைகள் மேம்பாடு, கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. இதேபோல், பேரூராட்சி பகுதிகளிலும் ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளன. வேலை வாய்ப்புகள் இல்லாமல் நகா் பகுதிகளிலும் ஏராளமான தொழிலாளா்கள் உள்ளனா். எனவே, தொழிலாளா்களின் வாழ்வாதாரம் மேம்படும் நோக்கில் பேரூராட்சி பகுதிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலைகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...