புதிய ஓய்வூதியத் திட்டத்தைரத்து செய்ய வலியுறுத்தல்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
Updated on
1 min read

தருமபுரி: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தருமபுரியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்ட செயற்குழுக் கூட்டம், சனிக்கிழமை மாவட்டத் தலைவா் ர.சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவா் எம்.வி.வாசுதேவன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை அரசு ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவ நிபுணா்களின் ஆலோசனையுடன், பிளஸ் 2 மாணவா்களுக்கு மட்டும் வகுப்புகளைத் திறக்க வேண்டும். ஆராய்ச்சி மற்றும் உயா்கல்வி ஊக்கத்தொகை தணிக்கைத் தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com