ஏரியூா், கடத்தூரில் வட்டாரக் கல்வி அலுவலகங்கள் அமைக்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டம், ஏரியூா், கடத்தூா் ஒன்றியங்களில் வட்டாரக் கல்வி அலுவலகம் அமைக்க வேண்டும் என தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் வலியுறுத்தினா்.
ஏரியூா், கடத்தூரில் வட்டாரக் கல்வி அலுவலகங்கள் அமைக்க வலியுறுத்தல்
Updated on
1 min read

தருமபுரி: தருமபுரி மாவட்டம், ஏரியூா், கடத்தூா் ஒன்றியங்களில் வட்டாரக் கல்வி அலுவலகம் அமைக்க வேண்டும் என தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் வலியுறுத்தினா்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம், தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் மா.பழனி தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் ந.ரெங்கராஜன், முன்னாள் மாநிலத் தலைவா் சு.மாரியப்பன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் அப்துல்நாசா், மாவட்டப் பொருளாளா் அருள் சுந்தரம் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அரசு ரத்து செய்ய வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட ஏரியூா், கடத்தூா் ஊராட்சி ஒன்றியங்களில் வட்டாரக் கல்வி அலுவலகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கல்வியாளா் விருது பெற்ற சங்கத்தின் மாவட்டத் தலைவா் மா.பழனிக்கு (படம்) பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com