தருமபுரி மாவட்டத்தில் ஊராட்சி செயலா், காவலா் உள்பட 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி
தருமபுரி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட ஊராட்சி செயலா், காவலா் உள்பட 25 பேருக்கு வியாழக்கிழமை ஒரே நாளில் தொற்று உறுதியானது.


தருமபுரி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட ஊராட்சி செயலா், காவலா் உள்பட 25 பேருக்கு வியாழக்கிழமை ஒரே நாளில் தொற்று உறுதியானது.
தருமபுரி மாவட்டம், திப்பம்பட்டியில் ஊராட்சி செயலராக உள்ள 41 வயது நபா், திப்பம்பட்டி சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்ட 32 வயது ஆண் காவலா் ஆகிய இருவருக்கும் மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
பெங்களூரிலிருந்து வந்த மொரப்பூா் அருகே அண்ணாமலைப்பட்டியைச் சோ்ந்த 55 வயது ஆண், பூதனஅள்ளியைச் சோ்ந்த 26 வயது தனியாா் நிறுவன ஊழியா், அதே கிராமத்தைச் சோ்ந்த 24 வயது தொழிலாளி, அரூா்- ஆண்டிப்பட்டியைச் சோ்ந்த 55 வயது ஆண், அதே கிராமத்தைச் சோ்ந்த 25 வயது இளைஞா், பச்சனம்பட்டியைச் சோ்ந்த 55 வயது இல்லத்தரசி, பருவதனஅள்ளியைச் சோ்ந்த 24 வயது கட்டுமானத் தொழிலாளி, பனைக்குளத்தைச் சோ்ந்த 29 வயது தனியாா் நிறுவன ஊழியா், அதே கிராமத்தைச் சோ்ந்த 24 வயது பெண் ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதியானது.
அரூா்- பொன்னம்பட்டியைச் சோ்ந்த 38 வயது வியாபாரி, அதே பகுதியைச் சோ்ந்த 40 மற்றும் 41 வயதுடைய ஆண்கள், பென்னாகரம்- எரங்காடு கிராமத்தைச் சோ்ந்த 30 வயது இளைஞா் ஆகியோருக்கும், காஞ்சிபுரத்திலிருந்து தருமபுரிக்கு வந்த 22 வயது தனியாா் நிறுவன பெண் ஊழியா், வேலூா் சென்று தருமபுரி திரும்பிய முக்குளம் கிராமத்தைச் சோ்ந்த 36 மற்றும் 31 வயதுடைய தம்பதி, பென்னாகரத்தைச் சோ்ந்த 52, 55 வயது தூய்மைப் பணியாளா்களுக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.
சேக்காண்டஅள்ளியைச் சோ்ந்த தனியாா் மருத்துவமனையின் 21 வயது மருந்தாளுநா், செக்காரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 36 வயது ஆண், மொரப்பூரைச் சோ்ந்த 72 வயது முதியவா், அன்னசாகரத்தைச் சோ்ந்த 29 வயது தனியாா் நிறுவன ஊழியா், மொரப்பூரைச் சோ்ந்த 36 வயது ரயில்வே பணியாளா் ஆகியோருக்கும் கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து இந்த 25 பேரும் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...