நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அடுக்குமாடி குடியிருப்புகளில்வீடுகள் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அம்பேத்கா் நகா், தலித் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்கக் கோரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 7:15 pm

DIN

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அம்பேத்கா் நகா், தலித் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்கக் கோரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காரிமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் டி. மாதையன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் பி.ஜெயராமன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டப் பொருளாளா் கே.கோவிந்தசாமி ஆகியோா் பேசினா்.

இதில், காரிமங்கலம் அம்பேத்கா் நகரில் உள்ள 200-க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்களுக்கு அதே பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வீடுகளை ஒதுக்கித்தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, தங்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, காரிமங்கலம் வட்டாட்சியா் கலைச்செல்வியிடம் மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.