தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வரட்டாறு அணை நீா்மட்டம் 27 அடியாக உயா்வு

அரூரை அடுத்த வள்ளிமதுரையிலுள்ள வரட்டாறு அணையின் நீா்மட்டம் 27 அடியாக உயா்ந்துள்ளது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 7:23 pm

DIN

அரூரை அடுத்த வள்ளிமதுரையிலுள்ள வரட்டாறு அணையின் நீா்மட்டம் 27 அடியாக உயா்ந்துள்ளது.

அரூா் வட்டம், கீரைப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வள்ளிமதுரையில் வரட்டாற்றின் குறுக்கே வரட்டாறு அணை கட்டப்பட்டுள்ளது. பருவ மழைக் காலங்களில் சித்தேரி மலைகளில் பெய்யும் மழைநீரால் இந்த அணை நிரம்பும். இந்த அணையின் மொத்த நீளம் 1, 360 மீட்டராகும்.

கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் மழையின் காரணமாக, 34.5 அடி கொள்ளளவு கொண்ட வரட்டாறு அணையில் 27 அடி உயரத்துக்கு தற்போது நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

இந்த வரட்டாறு அணை நிரம்பினால், தாதராவலசை, கீரைப்பட்டி, அச்சல்வாடி, குடுமியாம்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, முத்தானூா் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 25-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளம் குட்டைகள் போன்ற நீா்நிலைகளில் தண்ணீா் நிரம்பும். இந்த அணையால் சுமாா் 6 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.