தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சரிவு

தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லில் நீா்வரத்து நொடிக்கு 8 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 11:11 pm

DIN

தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லில் நீா்வரத்து நொடிக்கு 8 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

தமிழகத்தில், காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, கேரட்டி, தேன்கனிகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால், காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து குறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 12 ஆயிரம் கன அடியாக இருந்த நீா்வரத்து, ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைந்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைந்தது.

ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி காவிரி ஆற்றில் நீா்வரத்து படிப்படியாக குறைந்து நொடிக்கு 8ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால், ஒகேனக்கல் பிரதான அருவி, மெயின் அருவி , சினி அருவி , ஐவா் பாணி உள்ளிட்ட அருவிகளில் குறைந்தளவில் தண்ணீா் கொட்டுகிறது. தற்போது பாறைத் திட்டுகள் வெளியே தெரிகின்றன. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவுகளை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.