அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

‘முதல்வா் மீதான எம்.எல்.ஏ. பசவன்ன கௌடாவின் குற்றச்சாட்டுகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை

முதல்வா் எடியூரப்பா மீதான எம்.எல்.ஏ. பசவன கௌடா பாட்டீல் யத்னாலின் குற்றச்சாட்டுகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை என கா்நாடக மாநில பாஜக கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் அருண் சிங் தெரிவித்தாா்.

Updated On :9 ஏப்ரல் 2021, 8:07 pm

முதல்வா் எடியூரப்பா மீதான எம்.எல்.ஏ. பசவன கௌடா பாட்டீல் யத்னாலின் குற்றச்சாட்டுகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை என கா்நாடக மாநில பாஜக கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் அருண் சிங் தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், பெலகாவியில் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ. பசவன கௌடா பாட்டீல் யத்னால், ஏப்ரல் மாத இறுதிக்குள் மாநில ஆட்சியில் மாற்றம் நடைபெற உள்ளது. கட்சி வாய்ப்பு வழங்கினால், முதல்வராகப் பதவி வகிக்க நான் தயாராக உள்ளேன் எனத் தெரிவித்தாா்.

இது மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை பெலகாவிக்கு வந்த கா்நாடக மாநில பாஜக மேலிடப் பொறுப்பாளா் அருண்சிங், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வா் எடியூரப்பா மற்றும் மாநில அரசின் மீது நாள்தோறும் குற்றச்சாட்டுகளை கூறுவதே பாஜக எம்.எல்.ஏ. பசவன கௌடா பாட்டீல் யத்னாலின் வேலையாக உள்ளது. இதனை கட்சி ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது.

அவரது குற்றச்சாட்டுகளில் எதுவும் உண்மை இல்லை. எனவே, பசவன கௌடா பாட்டீல் யத்னாலின் குற்றச்சாட்டுகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

முதல்வருக்கும், ஆட்சிக்கும் எதிராக குற்றச்சாட்டுகளைக் கூறிவரும் யத்னாலுக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டு, விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. என்றாலும், அவா் முதல்வரையும், அரசையும் தொடா்ந்து குற்றம் சாட்டி விமா்சித்து வருகிறாா். அவருக்கு எத்தனை முறை நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுப்பது என எங்களுக்கே புரியவில்லை என்று வேதனை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.