நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை

அரூா் நகரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:18 pm

DIN

அரூா் நகரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 9 ஆவது வாா்டு சுடுகாடு மேட்டில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த சுடுகாடுமேடு குடியிருப்பு பகுதியில் கான்கிரீட் தெருக்கள், தெரு விளக்குகள் இல்லை. குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.

அதேபோல் சுடுகாடுமேடு பகுதியில் வசிக்கும் குடியிருப்புகளுக்கு மனைப்பட்டா வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இங்குள்ள மக்கள் சுடுகாடு மேட்டில் சுமாா் 40 வருடங்களுக்கு மேலாக வீடுகள் கட்டி வசித்து வருகின்றனா். மனைப் பட்டா இல்லாததால் வீடுகளுக்கு மின்சார இணைப்புகள் கிடைக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனா். எனவே, இப்பகுதி மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா, மின் விளக்குகள், கான்கிரீட் தெருக்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.