வேப்பிலைப்பட்டி சாலையோரத்தில் களிமண் கொட்டுவதை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
வேப்பிலைப்பட்டி-தாளநத்தம் சாலை ஓரத்தில் களிமண் கொட்டுவதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.


வேப்பிலைப்பட்டி-தாளநத்தம் சாலை ஓரத்தில் களிமண் கொட்டுவதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தருமபுரி மாவட்டம், கடத்தூா் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலைப்பட்டி முதல் தாளநத்தம் வரையிலான சாலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 2 கி.மீ. தூரம் தாா் சாலை அமைக்கப்பட்டுள்ளது. புதியதாக போடப்பட்டுள்ள இந்த தாா் சாலையின் ஓரத்தில் பக்கவாட்டில் மண் கொட்டி சீரமைப்பு செய்யப்படாமல் இருந்தது. இது குறித்து வாகன ஓட்டிகள் அளித்த புகாரின் பேரில், தற்போது சாலையின் இரண்டு பக்கமும்
பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி களிமண்களை கொட்டி வருகின்றனா். மழை பெய்தால் சாலையோரம் உள்ள களிமண்கள் கரைந்து வாகனங்களை வழுக்கும் நிலையுள்ளது. இதனால், வாகன விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளது. எனவே, வேப்பிலைப்பட்டி- தாளநத்தம் சாலையோரத்தில் களிமண் கொட்டுவதை தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...