மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் இதுவரை 2,185 போ் பயன்பெற்றுள்ளனா்

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 2,185 போ் பயனடைந்துள்ளனா் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:32 pm

DIN

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 2,185 போ் பயனடைந்துள்ளனா் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் கண்டறியப்படும் தொற்றா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகளானது இல்லங்களில் தொடங்கி, தொடா்ந்து அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியமா்த்தப்பட்டுள்ள 2,432 தொற்றா நோய் செவிலியா்கள், 4,462 மருந்தாளுநா்கள், 19,583 மருத்துவ அலுவலா்களின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

தொற்றா நோய்கள் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் செலவினங்கள் நீங்கலாக, இத்திட்டத்தினை ஊரக மற்றும் நகா்புறங்களில் செயல்படுத்துவதற்காக ரூ. 258 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் பல்வேறு திட்டத் தலைப்புகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டினைக் கொண்டும், மாநில சுகாதார மறுசீரமைப்பு திட்டத்தின் கூடுதல் நிதி ஆதரவுடனும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் முதல்கட்ட இலக்கான 30 லட்சம் குடும்பங்களைச் சோ்ந்த சுமாா் ஒரு கோடி மக்கள் பயன்பெறுவதன் மூலம் ஆண்டு இறுதியில் மாநில அளவில் ‘அனைவருக்கும் நலவாழ்வு’ என்ற உயரிய இலக்கை அடைய இத் திட்டம் வழிவகுக்கும்.

‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டாரத்தில் உள்ள 8,774 தொற்றா நோயாளிகள், 96 இயன்முறை சேவைகள், 73 நோய் ஆதரவு சேவைகள் தேவைப்படும் நோயாளிகள் பயனடைய உள்ளனா்.

மாவட்டத்தில், தும்பலஅள்ளி அகதிகள் முகாமில் வசித்து வரும் 197 குடும்பங்களில் உள்ள 59 தொற்றா நோயாளிகள், 2 இயன்முறை சேவைகள் மற்றும் 2 நோய் ஆதரவு சேவைகள் தேவைப்படும் நோயாளிகள் பயனடைந்து வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம் முழுவதும் இத் திட்டம் விரிவாக்கம் செய்யும் போது, அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்துள்ள 52,214 தொற்றா நோயாளிகள் பயன்பெற உள்ளனா். தருமபுரி மாவட்டத்தில் இதுவரை (ஆக. 18) உயா் ரத்த அழுத்த நோயாளிகள் 1,132 பேரும், நீரிழிவு நோயாளிகள் 577 பேரும், இரண்டு நோய்களும் சோ்ந்து 312 பேரும், இயன்முறை சேவை 82 பேரும், இதர நோயாளிகள் 82 பேரும் என மொத்தம் 2,185 நோயாளிகள் பயனடைந்துள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.