அரூரில் 48 மி.மீ மழை பதிவு
அரூா் வட்டாரத்தில் புதன்கிழமை இரவு பெய்த மழையில் 48 மி.மீட்டாரகப் பதிவானது.


அரூா் வட்டாரத்தில் புதன்கிழமை இரவு பெய்த மழையில் 48 மி.மீட்டாரகப் பதிவானது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை இரவு சுமாா் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது.
அரூரில் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இரவில் மழை பெய்தது. வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான நிலவரப்படி அரூரில் 48 மி.மீட்டராக மழை அளவு பதிவாகியிருந்தது.
அதுபோல, மொரப்பூா், கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலை சுற்று வட்டாரப் பகுதியிலும் மிதமான மழை பெய்தது. மழையால் வயல்வெளிகளிலும், சாலையோர தாழ்வான பகுதிகளிலும் மழைநீா்த் தேங்கியுள்ளது. பருவ மழையைப் பயன்படுத்தி ஆவணி பட்டத்தில் நெல் நடவு செய்யும் பணிகளைப் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தொடங்கியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...