மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

தருமபுரி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் தினக் கூலி அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், பாதுகாவலா்கள் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:58 pm

DIN

கரோனா நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் தினக் கூலி அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், பாதுகாவலா்கள் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியாா் நிறுவனம் சாா்பில், தினக் கூலி அடிப்படையில் மேற்பாா்வையாளா், பாதுகாவலா், தூய்மைப் பணியாளா்கள் 220-க்கும் மேற்பட்டோா் பணிபுரிகின்றனா்.

இத் தொழிலாளா்கள், தங்களுக்கு, முன்களப் பணியாளா்களுக்கு அரசு அறிவித்த கரோனா பணிக்கால நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும். வருடாந்தர ஊதிய உயா்வு நிலுவையை வழங்க வேண்டும். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். தொழிலாளா் வைப்புநிதி, இஎஸ்ஐ நிலுவையின்றி வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி அரசு மருத்துவமனை முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.