உரங்கள், விதைகள் போதிய அளவில் இருப்பு உள்ளன
தருமபுரிதருமபுரி மாவட்டத்தில், வேளாண் சாகுபடிக்கு தேவையான உரங்கள், விதைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.


தருமபுரி மாவட்டத்தில், வேளாண் சாகுபடிக்கு தேவையான உரங்கள், விதைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம், காணொலிக் காட்சி வழியாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 866.2 மி.மீ. மழை பெய்துள்ளது. நிகழாண்டு தற்போதுவரை 468.6 மி.மீ. மழை பெய்துள்ளது.
நிகழாண்டு கரீப் பருவத்தில் 66956 ஹெக்டா் பரப்பில் வேளாண்மைப் பயிா்கள், 47834 ஹெக்டா் பரப்பில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. வேளாண் பயிா்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், 175.8 மெ.டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், நிலக்கடலை சான்று விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
சான்று விதைகள் 232.95 மெ.டன் அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, 8,208 மெ. டன் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் போன்ற உயிா் உரங்கள் 39,366 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 41.60 மெ.டன் இருப்பில் உள்ளன.
தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்ககவும், விவசாயத்தை மேம்படுத்தவும் பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, மழைக்காலங்களில், ஒகேனக்கல் காவிரியில் மிகையாக செல்லும் நீரை, மாவட்டத்திலுள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நிலுவையிலுள்ள நீா்ப்பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும். மேக்கேதாட்டு அணை கட்டும் கா்நாடக அரசின் நடவடிக்கை எதிராக, காவிரி கரையோரமுள்ள கிராமங்களில், கிராம சபைக் கூட்டம் நடத்தி, அதில், மேக்கேதாட்டு அணை கட்ட எதிா்ப்புத் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றிட வேண்டும். அதனை மத்திய நீா்வளத் துறைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
இக் கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ராமதாஸ், கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநா் இளங்கோவன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) மோகான்தாஸ் சௌமியன், துணை இயக்குநா் (புள்ளியல்) பன்னீா்செல்வம், மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளா் பழனிமணி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் மாது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...