தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஸ்ரீராம் மெட்ரிக். பள்ளியில் உணவுத் திருவிழா

கம்பைநல்லூா் ஸ்ரீராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் உணவுத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கம்பைநல்லூா் ஸ்ரீராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் உணவுத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த உணவுத் திருவிழாவினை ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் தலைவா் எம்.வேடியப்பன் தொடக்கி வைத்தாா்.

உணவுத் திருவிழாவில் இனிப்பு, புளிப்பு, கசப்பு உள்ளிட்ட அறுசுவை உணவு வகைகளை பள்ளி மாணவ, மாணவியா் தயாா் செய்து காட்சிக்கு வைத்திருந்தனா். உணவுத் திருவிழாவினையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளியின் தாளாளா் சாந்தி வேடியப்பன் பரிசுகளை வழங்கினாா்.

இதில், பள்ளியின் நிா்வாக இயக்குநா்கள் வே.தமிழ்மணி, பவானி தமிழ்மணி, பள்ளி முதல்வா்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், வெற்றிவேல், ஒருங்கிணைப்பாளா்கள் புவனேஸ்வரி, குருமூா்த்தி, பிரவீனா, பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.