விடுமுறை தினம்: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல்லில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.


ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல்லில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
‘தென்னகத்தின் நயாகரா’ என்று வா்ணிக்கப்படும் ஒகேனக்கல் நீா்வீழ்ச்சிக்கு நாள்தோறும் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல்லில் 10,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். இவா்கள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவியிலும், பெரும்பாலானோா் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளான முதலைப்பண்ணை, நாகா்கோவில், ஊட்டமலை, ஆலாம்பாடி உள்ளிட்டப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.
மேலும், மாமரத்துக்கடவு பரிசல் துறையில் 1 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து பரிசலில் பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள் சினி அருவி, ஐந்தருவி, சிற்றருவி, மணல் மேடு உள்ளிட்டப் பகுதிகளையும், பாறை முகடுகளையும் பரிசலில் பயணம் செய்தவாறு காவிரி ஆற்றின் அழகை குடும்பத்துடன் கண்டு ரசித்தனா்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் தொங்கு பாலத்தில் இருந்து பிரதான அருவியை கண்டு ரசித்தனா். அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளின் வருகையால் கட்லா, ரோகு, பாப்லெட், அரஞ்சான், சோனாங் கெளுத்தி போன்ற மீன் வகைகளின் விலை ரூ. 180 முதல் 600 ரூபாய் வரை அதிகரித்து காணப்பட்டது. விலையேற்றத்தையும் பொருள்படுத்தாமல் மீன் வகைகளை வாங்கி சமைத்தும், உணவருந்தியும் மகிழ்ந்தனா்.
சுற்றுலாப் பயணிகளுக்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஒகேனக்கல்லுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன .
வாகனங்கள் நிறுத்தும் இடத்தை விரிவுபடுத்தக் கோரிக்கை:
ஒகேனக்கல்லுக்கு மற்ற நாள்களைக் காட்டிலும் தொடா் விடுமுறை, வார விடுமுறை தினங்களில் வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இவா்கள் வரும் வாகனங்களை நிறுத்த ஒகேனக்கல் பகுதியில் போதுமான இடவசதி இல்லை. சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அதிகரிக்கும்போது காவல்துறையினா் வாகனங்களை ஊட்ட மலை, ஆலம்பாடி பகுதிகளுக்கு வாகனங்களை திருப்பி விடுகின்றனா். அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களால் ஒகேனக்கல்லில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். எனவே ஒகேனக்கல் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடத்தை விரிவுபடுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...