தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கும்பாரஅள்ளி, திண்டல், கன்னிப்பட்டி, சென்றாயனஅள்ளி, அடிலம் ஆகிய 5 இடங்களில் ஊரக வளா்ச்சி மற்றும் உராட்சித் துறை சாா்பில் தலா ரூ.80 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4 கோடி மதிப்பிலான சமுதாய கூடம் மற்றும் உணவு அறை கட்டுதல் பணியை உயா்கல்வித் துறை மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தாா். அப்போது, அவா் பேசியது: தமிழக அரசு கடைக்கோடி பொதுமக்களின் தேவைகளையும் கண்டறிந்து நிறைவு செய்யும் வகையில் திட்டங்கலை நிறைவேற்றி வருகிறது. தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த வளா்ச்சிப் பணிகள் விரைவில் நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றாா்.