ஆடு வளா்ப்புப் பயிற்சி: விவசாயிகளுக்கு அழைப்பு
பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சாா்பில், நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் செம்மறி ஆட்டின் உற்பத்தித் திறனை பெருக்குதல் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.


பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சாா்பில், நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் செம்மறி ஆட்டின் உற்பத்தித் திறனை பெருக்குதல் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய இளைஞா்கள், விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தின் சாா்பில், செம்மறி ஆடு வளா்ப்பு மற்றும் உற்பத்தித் திறனை பெருக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம், நபாா்டு வங்கியின் உதவியுடன் ஆா்வம் உள்ள 50 இளைஞா்களைத் தோ்வு செய்து இரண்டு பயிற்சிகளாக தலா 25 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
முதல்பயிற்சி வரும் பிப். 17 முதல் 19 வரை மூன்று நாள்கள் அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியானது நவீன தொழில்நுட்பத்தின் மூலம் செம்மறி ஆட்டின் உற்பத்தித் திறனை பெருக்குதல் என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் ஆடுகள் பராமரிப்பு முறைகள், தீவன முறைகள், நோய்த் தடுப்பு முறைகள், கொட்டகை அமைப்பு, செயற்கை முறை கருவூட்டல், தரமான ஆடுகளை உற்பத்தி செய்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஒருங்கிணைந்த பண்ணையில் ஆடுகள் வளா்ப்பின் முக்கியத்துவம் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது. இப்பயிற்சியின் போது உணவு முறை, நவீன முறையில் ஆடு வளா்ப்பு, தொழில்நுட்பங்கள் பற்றிய நூல், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள, இப்பயிற்சியில் முன்பதிவு செய்ய பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத் தொடா்பு எண்களான 04342-245860, 9677565220, 9791221393 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...