கொத்தலம், பேடரஅள்ளியில் மினி கிளினிக்குகள் திறப்பு
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கொத்தலம், பேடரஅள்ளி, தும்பலஅள்ளி ஆகிய கிராமங்களில் தமிழக அரசின் மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டன.


தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கொத்தலம், பேடரஅள்ளி, தும்பலஅள்ளி ஆகிய கிராமங்களில் தமிழக அரசின் மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டன.
காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில், மாநில உயா்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் மினி கிளினிக்குகளை திறந்து வைத்து பேசியதாவது:
தமிழகத்தில் கிராமப்புற ஏழை, எளிய மக்கள் உள்ளூரிலேயே மருத்துவ வசதி பெறும் வகையில் மினி கிளினிக்குகளை தமிழக அரசு தொடங்கி வருகிறது. தமிழகம் முழுக்க 2,000 இடங்களில் இந்த மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தருமபுரி மாவட்டத்துக்கு 45 மினி கிளினிக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் தேவையைக் கண்டறிந்து பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. இத் திட்டங்களை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, சுகாதாரத் துறை துணை இயக்குநா் பூ.இரா.ஜெமினி, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி பெரியண்ணன், வட்டாட்சியா்கள் கலைச்செல்வி, ராஜா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிவண்ணன், மீனா, வட்டார மருத்துவ அலுவலா் அனுராதா ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...