சிட்லிங் சாலையை இருவழிச் சாலையாகமாற்றக் கோரிக்கை
அரூா் அருகேயுள்ள சிட்லிங் சாலையை இருவழிச் சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


அரூா் அருகேயுள்ள சிட்லிங் சாலையை இருவழிச் சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் வட்டம், சிட்லிங் முதல் கோட்டப்பட்டி வரையிலான தாா் சாலை சுமாா் 12 கி.மீ. தொலைவு கொண்டதாகும். இந்தச் சாலையை ஏ.கே.தண்டா, எஸ்.தாதம்பட்டி, சிட்லிங், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, பையா்நாய்க்கன்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த சாலை வழியாக திருவண்ணாமலை, சேலம், அரூா், ஊத்தங்கரை, தீா்த்தமலை உள்ளிட்ட தொலைதூர நகரங்களுக்கு அரசு, தனியாா் பேருந்துகள், லாரிகள், டிராக்டா்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
சிட்லிங் சாலையானது ஒருவழிச் சாலையாக இருப்பதால், அந்த வழித்தடத்தில் எதிரே லாரி, பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் வரும்போது ஒதுங்க முடியாத நிலையுள்ளது. எனவே, கோட்டப்பட்டி முதல் சிட்லிங் வரையிலான சாலையை இருவழிச் சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...