ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பாலக்கோடு வட்டத்துக்கு நாளை உள்ளூா் விடுமுறை

பாலக்கோடு வட்டத்துக்கு பிப்ரவரி 24-ம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:33 pm

DIN

பாலக்கோடு வட்டத்துக்கு பிப்ரவரி 24-ம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், அருள்மிகு புதூா் பொன்மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி பாலக்கோடு வட்டத்துக்கு மட்டும் பிப்ரவரி 24-ம் தேதி (புதன்கிழமை) உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த உள்ளூா் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 6.3.2021-ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூா் விடுமுறை நாள் செலாவணி முறிச் சட்டம் 1881-ன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் உள்ளூா் விடுமுறை நாளில் பாலக்கோடு சாா்நிலைக் கருவூலம், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்பட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.