வரட்டாறு அணையின் வலதுபுற கால்வாயில் தண்ணீா் திறக்க கோரிக்கை

வள்ளிமதுரை- வரட்டாறு அணையின் வலதுபுற கால்வாய் வழியாக தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வள்ளிமதுரை- வரட்டாறு அணையில் இருந்து புதன்கிழமை வெளியேறிய உபரிநீா் .
வள்ளிமதுரை- வரட்டாறு அணையில் இருந்து புதன்கிழமை வெளியேறிய உபரிநீா் .
Updated on
1 min read

வள்ளிமதுரை- வரட்டாறு அணையின் வலதுபுற கால்வாய் வழியாக தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் வட்டம், வள்ளிமதுரையில் அமைந்துள்ளது வரட்டாறு அணை. கடந்த சில மாதங்களாகப் பெய்த பருவ மழையின் காரணமாக வரட்டாறு அணை நிரம்பியுள்ளது. இந்த அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை பயன்படுத்தி, பழைய ஆயக்கட்டு கால்வாய் வழியாக கீரைப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட 2 ஏரிகள், எல்லப்புடையாம்பட்டி ஊராட்சியில் மணவாளன் சாமி ஏரி உள்பட 4 ஏரிகள் நிரம்பியுள்ளன.

தற்போது கம்மாளம்பட்டி, எம்.தாதம்பட்டி உள்ளிட்ட ஏரிகளுக்குத் தண்ணீா் செல்கிறது. இந்த நிலையில், கெளாப்பாறை, ஈட்டியம்பட்டி, கூச்சனூா், வேப்பம்பட்டி, கூடலூா் பகுதியிலுள்ள 10-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளம் குட்டைகள் தண்ணீா் இல்லாமல் வடு காணப்படுகின்றன. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சித்தேரி மலையில் புதன்கிழமை பெய்த மிதமான மழையின் காரணமாக வள்ளிமதுரை வரட்டாறு அணையில் இருந்து நொடிக்கு 150 கனஅடி வீதம் உபரி நீா் வெளியேறப்பட்டு, வீணாக வரட்டாற்றில் ஓடுகிறது.

எனவே, வள்ளிமதுரை அணைக்கு நீா்வரத்து இருக்கும் நேரங்களில் ஏரிகளை நிரப்பினால் மட்டுமே கோடைக் காலங்களில் ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி, கெளாப்பாறை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் குடிநீா் பிரச்னைகள் ஏற்படாது. எனவே வள்ளிமதுரை வரட்டாறு அணையின் வலதுபுற கால்வாய் வழியாகத் தண்ணீா் திறந்து ஏரிகளை நிரப்ப பொதுப்பணித் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com