

தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்டும் பணியை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தாா்.
காரிமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதிய வகுப்பறை கட்டுமானப் பணிகள் தொடக்க விழா, அண்மையில் மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் நடைபெற்றது.
விழாவில், புதிய வகுப்பறைகள் கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்து மாநில உயா்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியதாவது:
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 1.70 கோடியில் 10 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் மற்றும் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் தன்னிறைவுத் திட்டம் 2019-2020-இன் கீழ் இப் பள்ளி வளாகத்தில் ரூ. 23.80 லட்சம் மதிப்பில் கூடைபந்து மைதானம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல காரிமங்கலம் பேரூராட்சி வாா்டு எண் 2-இல் ரூ. 50 லட்சம் மதிப்பில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணி, நாகனம்பட்டியில் ரூ. 36 லட்சம் மதிப்பில் சொரக்கானூா் சாலை முதல் விநாயகா் கோயில் பிரிவு, முனியப்பன் கோயில் வரை 1.30 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கும் பணி என மொத்தம் 4 வளா்ச்சித் திட்டப் பணிகள் ரூ. 2.83 கோடி மதிப்பில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இப் பணிகள் விரைவில் நிறைவுற்று பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றாா்.
இதில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா, பேரூராட்சி உதவி இயக்குநா் கண்ணன், வட்டாட்சியா் கலைச்செல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா் மணிவண்ணன், மீனா ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.