தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பெத்தூரில் அம்மா சிறு மருத்துவமனைத் தொடங்கக் கோரிக்கை

பெத்தூரில் அம்மா சிறு மருத்துவமனை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 9:55 pm

DIN

அரூா்: பெத்தூரில் அம்மா சிறு மருத்துவமனை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபிசெட்டிப்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்டது பெத்தூா் கிராமம். அரூா்-சிந்தல்பாடி நெடுஞ்சாலையில் உள்ள பெத்தூா் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதைத் தவிர இந்த ஊருக்கு அருகில் பாப்பிரெட்டிப்பட்டி, சந்தப்பட்டி, அன்னை அஞ்சுகம் நகா், கோபிசெட்டிப்பாளையம், அண்ணாமலைப்பட்டி, ஆண்டிப்பட்டி புதூா் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

இப் பகுதியிலுள்ள மக்கள் சுமாா் 7 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள சிந்தல்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கோ அல்லது அரூா் அரசு மருத்துவமனைக்கோ சென்றுதான் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத இடங்களில் ஆரம்ப நிலை மருத்துவ சிகிச்சை அளிக்க தருமபுரி மாவட்டத்தில் 45 அம்மா சிறு மருத்துவமனைகளைத் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அவற்றில் ஒரு பகுதியாக அதிக கிராமப் பகுதிகளை மையமாகக் கொண்டுள்ள பெத்தூரில் அம்மா சிறு மருத்துவமனைத் தொடங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.