பணியாளா்கள் வேலைநிறுத்தம்: கூட்டுறவு சா்க்கரை ஆலை அரவை நிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பணியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் நடத்தும் வேலைநிறுத்தம் காரணமாக சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையின் கரும்பு அரவைப் பணிகள் நிறுத்தப்பட்டன.
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பணியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் நடத்தும் வேலைநிறுத்தம் காரணமாக சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையின் கரும்பு அரவைப் பணிகள் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டன.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரத்தில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை. இந்த ஆலையில் 2020-21-ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவைப் பணிகள் 2020, டிசம்பா் 25- ஆம்தேதி தொடங்கியது. இந்த சா்க்கரை ஆலையில் நிகழாண்டில் 1.28 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு அரவைப் பணிகள் நடைபெற்றன.

இந்த நிலையில், கோபாலபுரம், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பணிபுரியும் பணியாளா்கள், தொழிலாளா்களுக்கு ஈட்டிய விடுப்பு வழங்க வேண்டும், தற்காலிகப் பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை பிற்பகல்முதல் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனா்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் 243 நிரந்தரப் பணியாளா்கள் உள்பட 429 போ் ஈடுபட்டுள்ளனா். பணியாளா்களின் வேலைநிறுத்தம் காரணமாக கோபாலபுரம், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையின் கரும்பு அரவைப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com