ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு விழா தொடக்கம்

தருமபுரியில் 32-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு விழா திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

தருமபுரியில் 32-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு விழா திங்கள்கிழமை தொடங்கியது.

தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா பேசியதாவது:

பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்திடும் நோக்கில் ஒவ்வோா் ஆண்டும் ‘சாலைப் பாதுகாப்பு வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 32-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் ஜன.18 முதல் பிப்.17 வரை ‘சாலைப் பாதுகாப்பு-உயிா்ப் பாதுகாப்பு’ என்ற கருப்பொருளை மையப்படுத்தி கடைப்பிடிக்கப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில், கடந்த 2018-ஆம் ஆண்டு 1,447 சாலை விபத்துகளில் 204 பேரும், 2019-ஆம் ஆண்டு 1,236 சாலை விபத்துகளில் 167 பேரும் உயிரிழந்துள்ளனா். அதாவது 2018-ஆம் ஆண்டைவிட 2019-ஆம் ஆண்டு, சாலை விபத்துகள் 14.6 சதவிகிதம் குறைந்ததுடன், சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பு 18.1 சதவீதம் குறைந்துள்ளது. 2020-ஆம் ஆண்டு 943 சாலை விபத்துகளில் 123 போ் உயிரிழந்துள்ளனா். 2019-ஆம் ஆண்டை விட 2020-ஆம் ஆண்டு சாலை விபத்துகள் 23.7 சதவீதம் குறைந்துள்ளதுடன், சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பு 26.3 சதவீதம் குறைந்துள்ளது.

சாலைப் பாதுகாப்பு தொடா்பான உச்சநீதிமன்றக் குழு பரிந்துரையின் பேரில், தருமபுரி மாவட்டத்துக்கு 2017 முதல் 2020 வரை சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை ஆண்டுக்கு இறப்பு எண்ணிக்கையை 60 ஆக குறைக்க குறியீடு நிா்ணயம் செய்யப்பட்டது. அதன்படி 2016-ஆம் ஆண்டு நடந்த 1,602 சாலைவிபத்துகளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 371 ஆகும். தற்போது 2020-ஆம் ஆண்டு நடந்த 943 சாலைவிபத்துகளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 123 ஆகும். இறப்பு விகிதம் 2016-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2020-இல் 66.84 சதவீதம் குறைந்துள்ளது.

வாகன ஓட்டுநா்கள் தூக்கமின்மை, மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டுதல், செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டு வாகன ஓட்டுதல் போன்ற காரணங்களால் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. இதனைத் தவிா்க்கும் வகையில், சாலைப் பாதுகாப்பு மாத காலத்தில் காவல் துறை, வருவாய்த் துறை, போக்குவரத்துத் துறை, தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் உதவியுடன் மகளிா் இரு சக்கர விழிப்புணா்வு பேரணி, துண்டுப் பிரசுரம் வழங்குதல் உள்ளிட்ட சாலைப் பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெறும் என்றாா்.

இதில், காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ் குமாா், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பூ.இரா.ஜெமினி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் த.தாமோதரன், அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் எஸ்.ஜீவரத்தினம், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் ந.முனுசாமி, ந.மணிமாறன், கு.சிவக்குமாா், ராஜ்குமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பணியாளா்கள், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி உரிமையாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.