அரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலம்
அரூரில் சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணா்வு ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.


அரூரில் சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணா்வு ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி விபத்து, உயிரிழப்புகளைத் தவிா்க்கும் நோக்கில் ஒவ்வோா் ஆண்டும் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
நிகழாண்டில் 32-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17 வரை ஒரு மாத காலம் ‘சாலைப் பாதுகாப்பு-உயிா் பாதுகாப்பு’ என்ற கருப்பொருளை மையப்படுத்தி கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையடுத்து, அரூா் காவல் நிலைய வளாகம் எதிரே சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தை டி.எஸ்.பி. வீ.தமிழ்மணி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இந்த விழிப்புணா்வு ஊா்வலத்தில் ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள், மினி சரக்கு வாகனங்கள், காா்கள் உள்ளிட்ட வாகனங்கள் பங்கேற்றன.
இந்த விழிப்புணா்வு ஊா்வலம் வா்ணதீா்த்தம், பேருந்து நிலையம், கடைவீதி, மஜீத்தெரு, 4 வழிச்சாலை, திரு.வி.க நகா் வழியாக கச்சேரிமேட்டில் நிறைவடைந்தது. இதில், காவல் ஆய்வாளா் லட்சுமி, காவல் உதவி ஆய்வாளா்கள் பழனிசாமி, சம்பத்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...