நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முதியோரைக் கட்டிப்போட்டு நகை, பணம் திருட்டு

அரூா் அருகே முதியோரைக் கட்டிப்போட்டு பணம், நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:47 pm

DIN

அரூா் அருகே முதியோரைக் கட்டிப்போட்டு பணம், நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அரூா் ஒன்றியம், அச்சல்வாடி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி அண்ணாதுரை (65). இவரது மனைவி சின்னபாப்பா (60). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். மகன், மகள்கள் ஆகிய மூவரும் வெளியூரில் உள்ளனா். இந்த நிலையில், விவசாய நிலத்தில் தனியாக வசித்து வரும் அண்ணாதுரை, அவரது மனைவி சின்னபாப்பா ஆகிய இருவரையும் வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் மா்ம நபா்கள் கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 5 பவுன் நகை, ரூ. 7 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா். இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.