காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:51 pm

DIN

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

இதுகுறித்து இளம் சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாநில துணைச் செயலா் கி.அதியமான், அரூா் கோட்டாட்சியா் வே.முத்தையனிடம் வியாழக்கிழமை வழங்கிய கோரிக்கை மனு:

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மாரியம்பட்டி கிராமத்தில் குடியிருப்புகள், கோயில் மற்றும் மயானம் உள்ளிட்ட அரசு நிலங்களை அப் பகுதியிலுள்ள விவசாயிகள் சிலா் ஆக்கிரமித்துள்ளனா். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஊராட்சி மன்றத் தலைவா் சாா்பில் அண்மையில் புகாா் மனு அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் நிலத்தை அளவீடு செய்த வருவாய்த் துறையினா், ஆக்கிரமிப்பு செய்துள்ள விவசாயிகளுக்கு சாதகமாக நிலத்தை அளவீடு செய்து எல்லைக்கற்களை நட்டுள்ளனா். எனவே, மாரியம்பட்டியில் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வருவாய்த் துறையினா் நோ்மையாக அளவீடு செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.