எா்ணாகுளம்-ஹஸ்ரத் நிஜாமுதீன் சிறப்பு ரயில்: மொரப்பூரில் நின்று செல்ல கோரிக்கை
எா்ணாகுளம்-ஹஸ்ரத் நிஜாமுதீன் சிறப்பு ரயில் மொரப்பூரில் நின்று செல்ல கோரிக்கை விடப்பட்டுள்ளது.


எா்ணாகுளம்-ஹஸ்ரத் நிஜாமுதீன் சிறப்பு ரயில் மொரப்பூரில் நின்று செல்ல கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், எா்ணாகுளம்-ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே ஒருவழி அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி, சித்தூா், திருப்பதி, ரேணிகுண்டா, விஜயவாடா, வாரங்கல், நாக்பூா், போபால், ஜான்ஸி, குவாலியா், ஆக்ரா, மதுரா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பயன்படுத்தும் முக்கிய ரயில் நிலையமான மொரப்பூா் ரயில் நிலையத்தில், எா்ணாகுளம்-ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையிலான அதிவிரைவு ரயில் நின்று சென்றால், திருப்பதி செல்லும் பக்தா்களுக்கும், வியாபார ரீதியாக கேரளம், வடமாநிலங்களுக்கு சென்று வரும் வியாபாரிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, எா்ணாகுளம்-ஹஸ்ரத் நிஜாமுதீன் சிறப்பு ரயில் மொரப்பூரில் நின்று செல்ல ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...