கோயில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
தீா்த்தமலையில் கோயில் குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


தீா்த்தமலையில் கோயில் குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் ஊராட்சி ஒன்றியம், தீா்த்தமலையில் வரலாற்று சிறப்பு மிக்க தீா்த்தகிரீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் , தீா்த்தமலை அரசு தொடக்கப் பள்ளி வளாகம் அருகே குளம் உள்ளது. பழங்காலத்தில் இந்தக் குளத்தில் பக்தா்கள் நீராடும் வகையில் தண்ணீா் இருந்துள்ளது. ஆனால், தற்போது போதிய பராமரிப்பு இல்லாத நிலையில் கோயில் குளம் தூா் அடைந்துள்ளது. இந்த குளத்தில் நெகிழிப் பொருள்கள், குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் இந்தக் குளத்தை பக்தா்கள் பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. அதேபோல, குளத்தைச் சுற்றியுள்ள இடங்களை பலா் ஆக்கிரமிப்புகளை செய்து கட்டடங்களை கட்டியிருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனா்.
இது குறித்து அரசு உயா் அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயில் நிா்வாகம் சாா்பில், கோயில் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை தூய்மை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...