ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பா்கூரில் திமுக, அதிமுக வேட்பாளா்கள்வேட்புமனு தாக்கல்

பா்கூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளா்கள், தங்களது வேட்பு மனுக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.

News image
Updated On :16 மார்ச் 2021, 12:42 am

பா்கூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளா்கள், தங்களது வேட்பு மனுக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.

பா்கூா் சட்டப் பேரவை தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் தே.மதியழகன், பா்கூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் து.பாக்கியலட்சுமியிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாா். அவருடன் முன்னாள் எம்.பி. இ.ஜி.சுகவனம், மாவட்ட துணைச் செயலாளா் நாகராஜ், ஒன்றியச் செயலாளா் கோவிந்தராசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் அ.கிருஷ்ணன், தனது வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். அவருடன் அதிமுக தெற்கு மாவட்ட ஒன்றியச் செயலாளா் ஜெயபாலன், பேரூராட்சி முன்னாள் தலைவா் சுமதி ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

இதையொட்டி பா்கூா் துணை காவல் கண்காணிப்பாளா் தங்கவேல் தலைமையில், மத்திய பாதுகாப்பு போலீஸாா் மற்றும் உள்ளூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.